×

நீயா 2 கிராபிக்ஸ் காட்சிகளுக்கு 14 மாதம்

ஜெய், கேத்தரின் தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி நடித்துள்ள  ரொமான்டிக்  திரில்லர் படம், நீயா 2. முக்கிய கேரக்டரில் கருநாகம் நடித்துள்ளது. வரும் 10ம் தேதி படம் வெளியாகிறது. பாம்பு சம்பந்தமான கிராபிக்ஸ் காட்சிகள் 40 நிமிடங்கள் இடம்பெறுகிறது. இதுகுறித்து இயக்குனர் எல்.சுரேஷ் மற்றும்  கிராபிக்ஸ் நிபுணர் வெங்கடேஷ் கூறியதாவது: இந்தோனேசியாவில் கருநாகத்தின் பயிற்சியாளரை சந்தித்து, பாம்பு பற்றிய தகவல்களை  சேகரித்தோம். பிறகு 25 அடி நீள பாம்பை தேர்வு செய்தோம்.

கருநாகத்தின் குணாதிசயங்களை பயிற்சியாளர் உதவியுடன்  படமாக்கினோம். அவர் கைநீட்டியதும், கருநாகம் 3 அடி  உயரத்துக்கு மேல் ஏறியது. கேரக்டருக்கு தொடர்பு ஏற்படுத்த, போலியான பாம்பை வைத்து படப்பிடிப்பு நடத்தினோம்.  பிறகு அதை  வைத்து கிராபிக்ஸ் செய்தோம். கிராபிக்ஸ் காட்சிகளுக்கு 14 மாதங்கள் ஆனது.  நிஜ பாம்பு போல் இருக்க வேண்டும் என்பதால், சில காட்சிகளை கிரீன்மேட் முறையில் படமாக்கினோம்.

Tags :
× RELATED உயிர் தமிழுக்கு திரை விமர்சனம்